தாய் தந்தையின்றி வளர்ந்த மாணவர்கள் கல்வியில் சாதனை;
‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பொறியியல் கனவு நனவாக்கிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள அருள்ஜோதி ஆசிரமம் — இது ஏராளமான ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வாழ்வாதாரத்தின் முக்கிய தளமாக விளங்கிக்கொண்டிருக்கிறது. அங்கே தாய் தந்தையின்றி வளர்ந்த, மாணவர்கள் கல்வி ஒன்றே தன்னை சமூகத்தில் ஒரு மனிதனாக மாற்றி காட்டும் என்ற எண்ணம் கொண்ட இரண்டு மாணவர்கள் — லிங்கேஸ்வரன் மற்றும் செல்வக்குமார் — தங்கள் சூழ்நிலைகளை மீறி, பனிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.

கல்வியின் மூலம் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் விழிப்புணர்வுடன் முயற்சி செய்த இந்த மாணவர்கள், தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக பயிற்சியுடன் கூடிய பொறியியல் பட்டயப் படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இந்த சாதனையை உற்சாகமாக பாராட்டும் விதமாக, தமிழக மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் நேரில் வந்து மாணவர்களை சந்தித்தார். இருவருக்கும் தேவையான நிதி உதவியை வழங்கி, உற்சாகம் ஊட்டும் வகையில் வாழ்த்துகளை தெரிவித்தார்.

இது போன்ற நிகழ்வுகள் தான் தமிழகத்தில் ‘எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு’ என்ற அரசின் நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும். தாய் தந்தையின்றி வளர்ந்தாலும் கல்வியினை ஆசைப்பட்டு, தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொண்டு இருக்கும் இவர்கள் போன்ற மாணவர்களுக்கு சமூகத்தின் பக்கபலமும், அரசு உதவியும் அவசியம் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் நினைவூட்டுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தென்னரசு முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் அருள்ஜோதி ஆசிரமத்தின் செயலாளருமான காளிமுத்து நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் திமுக நகர செயலாளர் முருகானந்தம் திமுக வழக்கறிஞர் அணி செல்வராஜ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு மாணவனை வாழ்த்தினர்.

பேட்டி;லிங்கேஸ்வரன்
பொரியல் படிக்கும் மாணவன்.