திருவெற்றியூர்.

விம்கோ நகர் சுரங்கப்பாதை பணிகள் முடிந்து மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என வடசென்னை எம்பி கலாநிதி தெரிவித்தார்.
திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதி மக்கள் திருவெற்றியூர் நெடுஞ்சாலைக்கு செல்வதற்கு ஏதுவாக, அண்ணாமலை நகர் கேட் மற்றும் விம்கோ நகர் கேட் ஆகிய பகுதிகளில் ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி நடைபெறுகின்றன.
அதன்படி, 42 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் அண்ணாமலை நகர் கேட் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் அடுத்தாண்டு டிசம்பர் மாதம் முடியும் என அதிகாரிகள் ஆய்வின் போது தகவல் தெரிவித்தனர்.

மேலும் விம்கோ நகர் சுரங்கப்பாதை பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என எம்பி கலாநிதி கூறினார் .
இந்த ஆய்வின்போது திருவொற்றியூர் எம்எல்ஏ கே பி சங்கர் மண்டல குழு தலைவர் தனியரசு பகுதி செயலாளர் மையமா அருள்தாசன் மாமன்ற உறுப்பினர் திரவியம் உதவி கமிஷனர் விஜயபாபு செயல் பொறியாளர் பாண்டியன் பாபு மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர் மற்றும் திமுக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்