தஞ்சாவூர்
மீனாட்சி மருத்துவமனையில் 2 மகள்களுக்கு தாயான 45 வயதான பெண்ணின் கர்ப்பப்
கர்ப்பப்பையில் உருவான புற்றுநோய் அல்லாத திசு வளர்ச்சி. தசை மற்றும் நார்த்திசுக்களால் உருவான கழலைக் கட்டி.தசைத்திசுக்கட்டிகள் லியோமியோமாஸ் என அழைக்கப்படுகின்றன.

இக்கட்டி மிக அரிதாக 2.5 இலட்சம் நபர்களில் ஒருவருக்கு மட்டும் தசைத்திசுக்கட்டிகளின் வளர்ச்சி இருக்கும்.அறுவைசிகிச்சைக்கு முன்பு விரிவான திட்டமிடலும், பிறகு துல்லியமான பராமரிப்பும் அவசியமாக இருந்தது.

2 ஆண்டுகளுக்கு முன் அடிவயிற்றுப் பகுதியில் சிறிய வீக்கம் உருவாகி தசைத்திரளானது மிகப்பெரிதாக வளர்ச்சியடைந்ததால் சுவாசிப்பது அதிக சிரமமானதுதிசுத்திரள் வளர்ச்சி இதயம் மற்றும் நுரையீரல்கள் உட்பட பல உள்ளார்ந்த உறுப்புகளின் அமைவிடத்தையும், இயக்கத்தையும் பாதிக்கும் சாத்தியத்தைக் கொண்டிருந்ததால், அமரவோ, படுக்கவோ இயலாத நிலையில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய சூழல் உருவானது.


கர்பப் பையிலிருந்து சினைப்பை மற்றும் கர்ப்பப்பையோடு 27 கிலோ எடை கொண்ட நார்த்திசு திரளை அகற்ற ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை பெண் பாலுறுப்பியல் துறையின் முதுநிலை நிபுணர்மருத்துவர் ஆர்.நிர்மலா தலைமையில் 5 மணி நேர அறுவை சிகிச்சை செய்து பல மாதங்களாக பட்ட வேதனையை நீக்கியுள்ள அறுவைசிகிச்சை குழுவில் மயக்கமருந்தியல் துறையின் முதுநிலை நிபுணர்கள் மருத்துவர் ஜீ.அரிமாணிக்கம் மற்றும் மருத்துவர் வினோதா தேவி ஆகியோர் வெற்றிகரமாக செய்து சாதித்துள்ளனர். பிந்தைய பராமரிப்பை மருத்துவர் செந்தில்குமார் தலைமையிலான தீவிர சிகிச்சை பிரிவு குழு வழங்கியுள்ளது.

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர்.வி.பிரவீன், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசகர் டாக்டர். நுஜாத் ஜெபா மற்றும் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ இணை ஆலோசகர் டாக்டர். ஸ்டெஃபி கிரண் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.