புதுச்சேரி மாநிலம் இந்திரா நகர் சட்டமன்ற தொகுதியை சார்ந்த என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமான புகழ் என்கிற புகழேந்தி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்று ஆசி பெற்றார்.
முன்னதாக பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் என்.ஆர். புகழ் பேரவை சார்பாக அசோக், பாலா, செந்தில், ராஜா ஆகியோர் ஏற்பாட்டில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது. மேலும் பூத்துறை மனநல காப்பகம் மற்றும் தருமாபுரி ஆஞ்சநேயர் கோவிலில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் எஸ்.எஸ். கிருஷ்ணன், ஏற்பாட்டில் இரவு உணவு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல் திலாசுப்பேட்டை விநாயகர் கோவிலில் சீனு ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தனது இல்லத்தில் பிறந்தநாள் விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடினார்.
இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு பொன்னாடை அணிவித்து பூச்செண்டு கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இலவச புடவைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை என்.ஆர். புகழ் பேரவை ஜெயக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், என்.ஆர். புகழ் பேரவையினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆளுயர மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி, முத்து, பழனி, மணவாளன், முரளி, பிரபு, ஞானப்பிரகாசம், பழனியப்பன், பாலா, அசோக், செந்தில், சிவா, விநாயகம் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பிறந்தநாள் விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடும் வகையில் என்.ஆர். புகழ் பேரவையின் சார்பாக பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை என்.ஆர். புகழ் பேரவை நிர்வாகிகள் வெகு சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
