போக்குவரத்துக்கழக அதிகாரி நடவடிக்கை!!

மதுரை ஆரப்பாளையம் – பஸ் ஸ்டாண்டில் – இருந்து திருப்பூர், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பக்ரீத் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக பயணிகள் ஏராளமானோர் காத்திருந்தனர். மதுரை ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டிலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பஸ் ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது.
இதனையடுத்து பயணிகளுடன் பஸ்ஸ்டாண்டிற்குள் வந்து பஸ் நிறுத்தப்பட்ட பின்னர் பஸ் எடுப்பதற்கு தாமதமான நிலையில் பஸ்சில் இருந்த பயணிகள் ஓட்டுநர் கணேசனிடம் கேட்டபோது மேலாளர்கூறினால் மட்டும்தான் பஸ்சை எடுத்துச் செல்ல முடியும் என கூறியுள்ளார். பின்னர் பயணிகள் நேரடியாக ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்த போக்குவரத்து உதவி மேலாளரிடம் பஸ்சை விரைவாக எடுக்குமாறு கூறிய போது ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு
நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீஸ் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் அதனால் வேறு பேருந்தில் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் அவருக்கும்பயணிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்தநி லையில் அங்கு வந்த டிரைவர் கணேசனை அதிகாரி கடுமையாக திட்டியபடி அலுவலகத்திற்குள்அழைத்துச் சென்றனர்.
அப்போது உதவி மேலாளர் மாரிமுத்து திடீரென டிரைவர் கணேசனை தனது செருப்பால் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.
பிறகு பயணிகளை வைத்து தூண்டிவிடுகிறாயா? என கூறியபடி செருப்பால் அடித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலை யில் அதிகாரி மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசு பஸ் டிரைவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் டிரைவரை செருப்பால் அடித்த விவகாரத்தில் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் உதவி மேலாளர் மாரிமுத்துவை பணியிடம் நீக்கம் செய்து மதுரை மண்டல போக்குவ ரத்து நிர்வாக இயக்குனர் இளங்கோவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுபோன்று அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற் றும் நடத்துனர்கள் மீது விசா ரணை வரும்போது அதிகா ரிகள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என வும் பயணிகளை பேருந் தில் ஏற்றிவிட்டு காத்திருக்க வைக்க கூடாது, எனவும் ஓட்டுனர்களும் போக்குவரத்து அதிகாரிகளுடைய உத்தரவை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்