துறையூர் ஜூன் – 05
திருச்சி மாவட்டம் துறையூரில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதியின் 102வது பிறந்த நாள் (ஜீன் -03) விழா நகர செயலாளர் மெடிக்கல் முரளி தலைமையில் நடைபெற்றது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் துறையூர் நகர,ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் 102வது பிறந்த நாள் விழா நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேருவின் ஆலோசனையின் பேரில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேருந்து நிலையத்தின் முன்புறம் உள்ள கலைஞரின் முழு உருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சிவ சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இதில் நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன்,கார்த்திகேயன், பொதுக்குழு கிட்டப்பா, பூபதி , நகர துணை செயலாளர்கள் இளங்கோவன், பிரபு,பொருளாளர் சீனிவாசன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து, சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார்,வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ்குமார், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் தர்ஷினி திருமூர்த்தி, மாவட்ட ஐடி சேகர், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கிருபா, அரசு வழக்கறிஞர் ஜெயராஜ்,மாவட்ட பிரதிநிதி ரெங்கநாதபுரம் கார்த்திக், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கீரம்பூர் முத்துதுரை,தொண்டரணி வழக்கறிஞர் யோகராஜ், சிறுபான்மையினர் அணி வழக்கறிஞர் முகமது ரபீக், மாவட்ட இளைஞர் அணி சிலம்பரசன்,நகர மன்ற உறுப்பினர்கள் வீர மணிகண்டன், இளையராஜா, நித்யா கிருஷ்ணமூர்த்தி, சுதாகர், ஜானகிராமன், செந்தில்குமார், பாஸ்கரன், சுமதி மதியழகன்,முத்து மாங்கனி,ஹேமா மற்றும் மாணவரணி ரெங்கநாதபுரம் பிரபாகரன்,நகர இளைஞரணி அமைப்பாளர் பிரபு, துணை அமைப்பாளர் ஸ்டுடியோ சசிகுமார்,சரண்ராஜ் மற்றும் அன்பு காந்தி, மெடிக்கல் பிரேம் குமார்,18வது வார்டு மோகன், சசிகுமார், நல்லுசாமி,ரியல் எஸ்டேட் மணி,நடுவலூர் செல்வகுமார், காளிப்பட்டி சுப்பிரமணியன், தொமுச சுப்பையா, தளபதி கதிரேசன், ஆதனூர் ரவிச்சந்திரன், ஆட்டோ மணி மற்றும் கழக நகர ,ஒன்றிய கழக அனைத்து அணி நிர்வாகிகள் , தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *