புதுச்சேரி
வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை பிரதமர் அனுப்பியது
வரவேற்கத்தக்கது மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதவாலே பேட்டி
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது
பஹல்காம் சம்பவத்துக்குப் பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை பயங்கரவாதிகள், பாகிஸ்தான் அரசுக்கு எச்சரிக்கை தரும் வகையில் அமைந்தது. சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை.
பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை முறியடிக்க, இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவை பிரதமா் மோடி அனுப்பியது வரவேற்கத்தக்கது.தூய்மைப் பணிக்கான போதிய நிதியும் மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
அவற்றை முறையாக மாநிலங்கள் செலவிட வேண்டும். அப்படி செலவிடுவதை மத்திய அரசின் சமூக நீதித் துறை கண்காணிக்கும் அனைத்துத் தரப்பினரும் பலனடையும் வகையில் மத்திய அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றாா் ராம்தாஸ் அதவாலே. பேட்டியின்போது, புதுவை மாநில ஆதிதிராவிடா், பழங்குடியினா் துறை இயக்குநா் இளங்கோவன், இந்திய குடியரசு கட்சி புதுச்சேரி மாநில தலைவர் எஸ். ஞானமூர்த்தி மற்றும் தமிழக தலைவர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
