அலங்காநல்லூர்
மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சேலம் பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார், ஆகிய இருவரிடமும் நேரில் சென்று கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார்.
கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் குமாரம் அரியூர் சாலையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார் அவருக்கு மேற்கு தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவு அவரது குடும்பத்தின் சார்பில் வழங்கப்பட்டது.