பேரையூரில் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்க நூற்றாண்டு விழா நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூரில் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்க நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது.இதனை முன்னிட்டு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்சமூக ஒற்றுமை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று சமூக நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று பூவைசிய இந்திர குல வேளாளர் சங்க நூற்றாண்டு விழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் வனத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெருமாள் பீட்டர், டாக்டர் அம்பேத்கர், தேவநேய பாவாணர், தியாகி இமானுவேல் சேகரன், உள்ளிட்ட தலைவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதில் வடக்குப்பட்டறை குறும்படம் வெளியிடப் பட்டது. அதனை முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகரன் வெளியிட்டார்.
பொருளாதார மேம்பாடு, உயர்கல்வி தொடர்பான நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டில் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் கவுரவிக்கப்பட்டார்கள் விளையாட்டுப் போட்டியில் தேசிய மாநில அளவை வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பூ வைசிய இந்திர குல வேளாளர் மாணவர் மற்றும் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அர்ஜீனா விருது பெற்ற இந்திய அணியின் முன்னாள் கபடி அணி தலைவர் மண்ணத்தி கணேசன் கலந்து கொண்டார்.
