காஞ்சிபுரம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவருக்கு பாராட்டு விழா மற்றும் மாவட்ட ,வட்ட பேரவை கூட்டம். காஞ்சிபுரம் மே 25: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கே. கங்காதரனுக்கு பாராட்டு விழா மற்றும் மாவட்ட அனைத்து வட்டகிளை பேரவை கூட்டம் நேற்று காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் எஸ். வின்சென்ட் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் நாராயணமூர்த்தி வரவேற்பு பேசினார் மாநில துணைத்தலைவர் எம். வேலாயுதம், மாவட்ட செயலாளர் பி .முத்து ,மாவட்ட துணை தலைவர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத் தலைவர் கே. பலராமன் மாநில தலைவர் கே கங்காதரனின் சேவையைப் பாராட்டி நினைவு பரிசு வழங்கி ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவியும் வழங்கப்பட்டது. இதில் மாநில பொருளாளர் இ. திருவேங்கடம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் இராஜேந்திரன் சிறந்த நிர்வாகிகளுக்கு கேடயம் வழங்கி பேசினார்கள் .
கோவை மாவட்ட பொருளாளர் எல். நாகராஜ், வேலூர் மாவட்ட தலைவர் காசி, காஞ்சிபுரம் வட்டத் தலைவர் ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் தாமஸ் இளங்கோவன், மதிவாணன், விட்ட பாய் ,கந்தசாமி,வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநிலத் தலைவர் கே. கங்காதரன், மாவட்ட பொருளாளர் சவுதாமணி சத்தியசீலன் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் குப்பன் நன்றி கூறினார்.
