திருச்சி மாவட்டம்,துறையூர் பேருந்து நிலையம் முன்பு துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை, நீட் தேர்வு,ஹிந்தி திணிப்பு, சமூக நீதிக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகாமுனி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ப.க.அமைப்பாளர் மு. தினேஷ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. செந்தில் குமார்,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் த.ரஞ்சித் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில ப. க. அமைப்பாளர் அ.சண்முகம் தொடக்க உரை ஆற்றினார். மாவட்ட திராவிடர் கழக தலைவர் ச. மணிவண்ணன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பற்றியும் அவசியம் பற்றியும் விளக்க உரை ஆற்றினார். இதில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு,மாவட்ட துணைத் தலைவர் முசிறி மா. ரத்தினம்,மாவட்ட ப.க.தலைவர் ஆசிரியர் பெ.பாஸ்கர்,செயலாளர் ஆசிரியர் பி. பிரபு, மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் பாலச்சந்திரன், உப்பிலியபுரம் ஒன்றிய ப.க. தலைவர் மாராடி எம்.ஏ. ரமேஷ்,துறையூர் நகர இளைஞரணி செயலாளர் பிளாசம் ஸ்டாலின்,துறையூர் நகர திராவிடர் கழக செயலாளர் ந.இளையராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் பெ.பாலகிருஷ்ணன்,இரா. நந்தகுமார்,நகர ப. க. அமைப்பாளர் அ.தமிழ்செல்வன்,துணை அமைப்பாளர் க. கபில்தேவ், வினோத்,தமிழ்ப்புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் க. ராஜா,மாற்றுத்திறனாளிகள் சங்கம் ரவி,எம்.ஆர்.சந்திர போஸ்,ம.இனியன் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் மாவட்ட மாணவரணி தலைவர் ரெ.தன்ராஜ் நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து “நீட் சமூக நீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி” மற்றும் மக்கள் விரோத பாஜக அரசை விரட்டியடிப்போம் என்ற ஆசிரியர் கி. வீரமணி எழுதிய புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
