விருத்தாசலம்,
விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 4.25 கோடி மதிப்பில் 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறை கட்டிடம் கட்டுவதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் நடந்த கட்டிட பூமி பூஜை விழாவில் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு செங்கல் எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டினர்.

முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருளாளர் ராஜன், நகர தலைவர் ரஞ்சித் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் முனியன் வரவேற்றார். இதில் பொதுப்பணித்துறை தொழில்நுட்ப சிதம்பரம் உட்கோட்ட உதவியாளர்கள் தாமஸ் ராஜா, அருள் ஞானம், வட்டார தலைவர்கள் ராவணன், சாந்தகுமார், ராமச்சந்திரன், மாவட்ட பொது செயலாளர் ராஜா, லெனின், மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.