செங்கல்பட்டு மாவட்டம் ஹேன்ட் இன் ஹேண்ட் இந்தியா Coastal Circularity திட்டத்தின் கீழ் மகாபலிபுரம் பகுதியில் மாபெரும் கடற்கரை தூய்மை பணி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி அதிகமான சுற்றுலா பயணிகள் கூடும் பகுதிகளில் ஒன்றான மகாபலிபுரம் கடற்கரையில் காலை 7:00 மணிக்கு நகராட்சி தலைவர் தலைமையில் கொடியசைத்து தொடக்கமளிக்கப்பட்டது.
இந்த தூய்மை பணியில், கொத்திமங்கலம் மற்றும் மகாபலிபுரம் கடற்கரை
பகுதியில் வசிக்கும் 112 மறுசுழற்சி பாதுகாவலர்கள் (Recycle Guardians) மற்றும்
10 நகராட்சி தூய்மை பணியாளர்கள் இணைந்து பங்கேற்றனர்.
தூய்மை பணியின் போது இரண்டு மெட்ரிக் டன் அளவு குப்பைகள் சேகரிக்கப்பட்டு
நகராட்சி சொந்தமான இரண்டு டாடா ஏஸ் வாகனங்கள் மூலம் அவை அப்புறப்படுத்தப்பட்டது.
பணி சிறப்பாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நகராட்சி தலைவர் அவர்கள், கடற்கரை தூய்மை குறித்த சிறப்புரையுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
மேலும், தூய்மை பணியில் பங்கேற்ற கடற்கரை பகுதியைச் சேர்ந்த திட்ட பயனாளிகள் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு,ஹேன்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம், அரசு துறைகளுடன் இணைந்து, சான்றிதழ்கள் மற்றும் பிற நலத்திட்டங்களை வழங்க உறுதியளித்தது.
இறுதியாக, தூய்மை பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் உணவு, குளிர்பானம், குடிநீர்
மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு, வாகனங்களின் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
