பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சை மாவட்டம்
பாபநாசம் பகுதியில் பெய்த கனமழையால் பருத்தி வாழை சாகுபடி நீரில் மூழ்கி பாதிப்பு விவசாயிகள் வேதனை ….
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை …….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவடை, பார்வதிபுரம்,ராஜகிரி பாபநாசம், அரையபுரம் மணல்மேடு, உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட கோடை பயிர்களான வாழை, பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தும் பருத்தி மழைநீரில் மூழ்கியும் பாதிக்கப்படைந்துள்ளது .
மேலும் இப்பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர்வரப்படாததால் தேங்கிய மழைநீர் செல்ல முடியாமல் உள்ளது .
வடிகால் வசதியும் இல்லை என குற்றம்சாற்றுகின்றனர் மேலும் விவசாயப் பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வான பகுதியில் செல்வதால் ஆபத்து ஏற்படும் முன் அதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
உடனடியாக போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மை துறை தோட்டக்கலை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
