கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபயப்ரத யோக ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனத்திற்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..

கோவை சலீவன் வீதி பகுதியில் மாவட்டத்திலேயே முதல் கோவிலாக அமையப்பட்ட ஸ்ரீராகவேந்திரா பிருந்தாவன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 16 ந்தேதி துவங்கி
கணபதி ஹோமத்துடன் யாக பூஜை, வாஸ்து ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபுர கலச ஹோமம், பூர்ணாதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளும் நடைப்பெற்றது,

தொடர்ந்து,பூஜ்ய ஸ்ரீ பலிமாரு மடாதீஸ்வர்ர் ஸ்ரீ வித்யாதீஸ தீர்த்த சுவாமிகள் முன்னிலையில் பிரதிஷ்டா ஹோமம்,நாடி சந்தானம் மஹா பூர்ணாஹுதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது..

பின்னர் ஸ்ரீ யோக ஆஞ்சநேயர்,ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்ப கலசங்கள் மேளத்தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது..

தொடர்ந்து பஞ்சாமிர்த் அபிஷேகம்,மகா தீபராதனை செய்து பொதுமக்களுக்கு தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டது.