தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பல ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து நெல் சாகுபடிகளும் அறுவடை நேரத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த கோடை மழை கதிர்கள் அனைத்தும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது
திருவோணம் தாலுக்கா பகுதிகளிலும் உஞ்சியவிடுதி, தளிகைவிடுதி,காடுவெட்டிவிடு , பணிகொண்டான்விடுதி உள்ளிட்ட 48 வருவாய் கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் கோடை நடவு செய்யப்பட்டிருந்த நெல்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இதனால் கடன் வாங்கி கோடை நடவு செய்யப்பட்டிருந்த விவசாயிகள் தன்னுடைய நெல் கதிர்கள் அனைத்தும் அறுவடை நேரத்தில் கோடை மழையால் பாதிப்பு அடைந்துள்ளதே..?தான் வாங்கிய கடனை திரும்ப எப்படி அடைக்க போகிறோம் என்று விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள்
எனவே தமிழக அரசும் , மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட நெல் சாகுபடி பரப்புகளை கிராமம் வாரியாக வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு பணிகள் செய்யப்பட்டு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000/- வீதம் பேரிடர் வெள்ள நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
