தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் தென்தாரை பீமராயர் மெயின் வீதியில் எழுந்து அருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ சின்ன காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பங்கேற்பு
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 24 வது வார்டு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சின்ன காளியம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சித்திரை மாதம் 19ம்நாள் வெள்ளிக்கிழமை கோவில் நிர்வாகிகள் தலைமையில் சின்னப்ப சிவாச்சாரியார் சோமாஸ் கந்த சிவாச்சாரியார் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு,மங்கள இசையுடன் இத்வார பூஜை மண்டப பூஜை வேதிகா அர்ச்சனை சொன்னவாதி ஹோமம் நாடி சந்தனம் திரவிய ஆகுதி மகாபூர்ண ஆகுதி திருக்கழசங்கள் திருக்கோயில் வளமாக வந்து துல லிங்கம் எனும் கோபுர விமான கும்பாபிஷேகம் அதனை தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ நவநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகள் ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலர் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர் பின்னர் கோவில் நிர்வாகம் சார்பாக மகா அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
