விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு

கடமலைப்புத்தூர்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த கடமலைப்புத்தூர் கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள ஸ்ரீ மாய முக்த தத்த ஷேத்திரத்தில், நவராத்திரி பெருவிழாவின் நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு மகா சண்டியாகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மைசூர் அவதூத பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி ஸ்ரீ விஜயானந்த தீர்த்த சுவாமிகள் ஆகியோரின் அனுக்கிரகத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, காலை 7.30 மணிக்குத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கும், ஸ்ரீ பால தத்தாத்ரேயருக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னபாவாடை சேவை, தூப தீப ஆராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து, மதியம் 2 மணியளவில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர். நவராத்திரி விழாவின் நிறைவாக நடைபெற்ற இவ்வழிபாட்டு நிகழ்ச்சி பக்தர்களிடையே ஆன்மிக மகிழ்ச்சியையும் இறைநம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *