தமிழ்நாடு புத்தகத் திருவிழா குழு மற்றும் கும்பகோணம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா, கும்பகோணம் கே.ஆர்.ஜி. பவளம் பேலஸில் கோலாகலமாக துவங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை ஏராளமான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த கண்காட்சியில் சிறுவர் இலக்கியம், ஆன்மிகம், வரலாறு, அறிவியல், சுயமுன்னேற்றம், போட்டித் தேர்வு நூல்கள், நாவல்கள், கவிதை தொகுப்புகள் என அனைத்து வகையான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. பல முன்னணி பதிப்பகங்கள் தங்களது ஸ்டால்களை அமைத்துள்ளன. புத்தகங்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இந்த புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் ஜெயமுருகன் அவர்களின் படைப்புகளுக்கு தனி ஸ்டால் அமைக்கப்பட்டு, பார்வையாளர்களின் சிறப்பு கவனத்தை ஈர்த்து வருகிறது.
அவர் இதுவரை 12 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
தத்துவப் பாட்டு புத்தியும் சொல்லுங்கள் (2003) – வாழ்வியல் தத்துவங்களை எளிய பாடல்களாக விளக்கும் நூல்,
*திருக்கவிதை (2017) – சமூக சிந்தனைகளை தாங்கிய கவிதை தொகுப்பு.
ஒரு தலைமுறை ஆட்சி ஆண்டார்கள், முழு தலைமுறைக்கு சொத்து குவித்தார்கள், ஒரு தலைமுறை மக்களை வறுமையில் தள்ளினார்கள் (2022) – சமகால அரசியல் மற்றும் சமூக பொருளாதார நிலையை தோலுரித்துக் காட்டும் ஆய்வு நூல்.
இவை தவிர மேலும் 9 நூல்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
விழாவில் பேசிய எழுத்தாளர் ஜெயமுருகன், நான் இதுவரை 12 புத்தகங்களை எழுதியுள்ளேன். ஒவ்வொரு புத்தகத்திலும் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களையும், எனது அனுபவங்களையும் பதிவு செய்துள்ளேன். குறிப்பாக இளைஞர்கள் புத்தக வாசிப்பை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் தான் ஒரு தலைமுறையை வழிநடத்தும்” என்றார். மேலும் தனது புத்தகங்களை அனைவரும் படித்து பயன்பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
