கும்பகோணம் மாதுளம்பேட்டை ஆதிலட்சுமி நகரில் உள்ள ஸ்ரீ விஜய் கணபதி ஆலயத்தில் விஜயதசமி விழா சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விழாவில் ஆதிலட்சுமி நகரைச் சேர்ந்த உத்ராபதி, புலவர் அண்ணாதுரை, ராம் அழகு, சரவணன், விஜயன், ரகுராமன், விஷ்ணுவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், ஆதிலட்சுமி நகர் குடியிருப்பு நலச் சங்கத்தினரும் இணைந்து செய்திருந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *