திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் ஜவகர் சிறுவர் மன்ற குழந்தைகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் பெ.பார்த்திபன், தபேலா இசைக் கலைஞர் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவிய ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் டி.சாந்தி பங்கேற்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் பற்றிய விழிப்புணர்வு தகவல்களையும், பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதை பற்றியும் விளக்கி கூறினார். மேலும் செல்போன் பயன்பாட்டால் தான் அதிக பெண் குழந்தைகள் பாதிப்பு அடைவதாக வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பெண் குழந்தைகளுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிலம்பு பயிற்சியாளர் சந்தோஷ், பாடகர் லாரன்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ஆசிரியர் மகாவீர் நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *