டெல்லி காவல்துறை யின் அடக்கு முறையைக் கண்டித்து முகமூடி அணிவித்து நூதன போராட்டம் – மோடிக்கு எதிராக முழக்கம்.
மதுரை ரயில் நிலையம் முன்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி ஒய் எஃப் ஐ), இந்திய மாணவர் சங்கம் (எஸ் எஃப் ஐ) ஆகியவற்றின் மாநகர் மற்றும் புறநகர் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு
களின் அடிப்படை யில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் அமைப்புகள் மீது டெல்லி காவல்துறை அடக்குமுறையை ஏவி, கைது நடவடிக்கைகளை மேற் கொள்வதைக்
கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் முகமூடியை ஒருவருக்கு அணிவித்து, அவரைக் கயிற்றால் கட்டி ஊர்வலமாக அழைத்து வந்து நூதன முறையில் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டேவிட் ராஜதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் வேல்தேவா, புறநகர் மாவட்டச் செயலாளர் தமிழரசு, மாநகர் மாவட்ட தலைவர் செல்வா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, சென்னைக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிராக, மதுரை ரயில் நிலையம் முன்பு நின்று “கோ பேக் மோடி” என முழக்கமிட்டனர்.
