கோவையில் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் 31-ம் ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கவுரி சங்கர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி, பாபுஜி சுவாமிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
விழாவில் பேசிய பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி, மனிதநேயம் வளர வேண்டும் என்றால் மனிதர்களிடையே கருணை, இரக்கம், அன்பு ஆகிய பண்புகள் வளர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தர்மம் இருந்தால் மனிதன் உயர்வான் என்றும், கருணை, மனிதநேயம், இரக்கம் நிறைந்த மனிதர்களிடையே இறைவன் இருப்பான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், சமூக சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் அறக்கட்டளையின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
