திருநெல்வேலி அட்யா பட்யா விளையாட்டின் சப்ஜூனியர் பிரிவு ஆண் பெண் தேசிய சேம்பியன்ஷிப் போட்டிகள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் வைத்து இந்தமாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதிவரை நடைபெற்றது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில அணிகளும் கலந்துகொண்ட இப்போட்டியில் தமிழக ஆண் பெண் அணிகள் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

இதில் ஆண்கள் அணியில் இடம்பெற்றிருந்த நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பேச்சிமுத்து, கங்கை அமரன்; வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுரேந்திரன் மற்றும் அணிமேலளர் திரு இசக்கி ஆகியோர் இரயில் மூலம் திருநெல்வேலி வந்தடைந்தனர். அவர்களுக்கு இரயில் நிலையத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தலைவர் முனைவர் சேவியர் ஜோதி சற்குணம், சைக்கிள் போலோ சங்கத்தின் முனைவர் பெரியதுரை; கயிறு இழுக்கும் சங்கத்தின் திரு ஆறுமுக நயினார்; அட்யா பட்யா சங்கத்தின் முத்துசாமி; ஒருங்கிணைப்பாளர் திரு காந்திநாத் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *