திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் வள்ளலாரின் 203 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் படத்திறப்பு நிகழ்வு மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆசிரியர் மகாவீர் வரவேற்றார். கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக, ஜோதிடரத்னா கு.சதானந்தன் பங்கேற்று, வள்ளலாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் வள்ளலாரின் கொள்கைகள் இன்றளவும் அனைத்து மக்களிடையே சமரசத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்துகிறது என்று பேசினார். இறுதியில் வள்ளலாரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *