தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளான்டர்ஸ் அசோசியேசன் கல்லூரி மகளிர் மையம் தேனி மாவட்ட ஆட்சியர் இரா வைத்திநாதன் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து மாணவிகளுக்கான தேசிய ஊட்டச்சத்து மாதம் 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எஸ்.இராமநாதன் தலைமை தாங்கினார் கல்லூரியின் செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருசோத்தமன் கல்லூரியின் துணைத் தலைவர் எஸ்.ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

மகளிர் மைய ஒருங்கிணைப்பாளரும் வணிகவியல் துறை பேராசிரியருமான எஸ். விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சிவக்குமார் தலைமை உரையாற்றினார் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் தேனி மாவட்ட வட்டார வளப் பயிற்றுனர் எம் சந்தனமாரி பேசும்போது நமது அங்கன்வாடி நமது பொறுப்பு என்ற மையக் கருவில் செப்டம்பர் 2026 அனுசரிக்கப்பட்ட ஒன்பதாவது தேசிய ஊட்டச்சத்து மாதத்தை யொட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

சமச்சீர் உணவு போதிய புரதம் சிறுதானியங்கள் காய்கறிகள் பழங்களின் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச்சத்து தோட்டம் குறித்தும். இரத்தச் சோகை தடுப்பு பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலச் சுகாதாரம் எளிய உடற்பயிற்சிகள் அதிக அலைபேசிப் பயன்பட்டால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் ஊட்டச்சத்து இயக்கத்தில் குடும்பம் சமுதாயம் இளைஞர்களின் பங்கு ஆகியவற்றை மாணவ மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கி பேசி எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் கல்வியின் அனைத்து துறை மாணவிகளும் பங்கேற்று தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று விழிப்புணர்வு அடைந்தனர்

கல்லூரியின் மகளிர் மைய உறுப்பினர் முனைவர் ச. யோக பிரியதர்ஷினி இந்த நிகழ்ச்சி பற்றி கருத்துரை வழங்கினார். கல்லூரி குழு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் முனைவர் முனைவர் கே.வனீத்தீஸ்வரி நன்றி கூறினார் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி கண்காணிப்பாளர் யுவராஜா மற்றும் கல்லூரி மகளிர் மையம் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *