புதுச்சேரி,
புதுச்சேரி ப்ளூ ஸ்டார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் மாஸ் எக்ஸ்போ சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் திரு. சிவகுமார், முதல்வர் மற்றும் விக்சித் பாரத் 2047 மாநில பொறுப்பாளர் திரு. சக்திவேல் ரௌத்திரம் ஆகியோர் கலந்து கொண்டு, மாஸ் எக்ஸ்போவில் சிறப்பாகப் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

மாணவர்களின் அறிவியல் ஆர்வம், புதுமையான சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த மாஸ் எக்ஸ்போ, மாணவர்களுக்கு சிறந்த அனுபவமாக அமைந்தது, இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *