ஆவடி காவல் ஆணையர் உத்தரவின்படி செங்குன்றம் மாவட்டம் காவல் துணை ஆணையர் மகேஷ்வரி தலைமையில், மணலி சரக உதவி ஆணையர் விவேக் கண்ணன், காவல் ஆய்வாளர்கள் ராஜ்குமார், மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் கொண்ட காவல் குழுவினர் மணலி, மணலி புதுநகர் ஆகிய காவல் சரக பகுதிகளில் உள்ள தனியாருக்கு சொந்தமான பார்சல் சர்வீஸ் குடோன்களில் போதைப்பொருள் உள்ளதா என நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
இதில் சிறப்பு பயிற்சி பெற்ற கண்ணகி என்ற மோப்ப நாய் மூலம் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பார்சல்களில் போதை பொருள்கள் உள்ளதா என சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது எந்தவிதமான போதை பொருட்களும் கிடைக்கவில்லை. பின்னர் வட மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சந்தேகப்படும்படியான பார்சல்கள் வந்தால் அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என துணை ஆணையர் மகேஸ்வரி பார்சல் சர்வீஸ் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
