மன்னார்குடி., ஜூலை., 25

மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை 41 கிலோ மீட்டர் வரை புதிய ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 14 ஆண்டுகளாக முன்பாக ரயில்வே நிலை குழு தலைவராக இருந்த டி ஆர் பாலு அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தநிலையில் நிலம் கையகப்படுத்துதல், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டம் தடைப்பட்டு நின்றுள்ளது.

இத்திட்டம் உடனடியாக விரைந்து செயல்படுத்த என வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வர்த்தக சங்கம், உள்ளிட்ட சேவை சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கம், இந்திய , மருத்துவ கவுன்சில், ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த 1500- க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

முன்தாக தேரடியில் தொடங்கிய இப்பேரணி மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது பேரணியில் பட்டுக்கோட்டை , மன்னார்குடி ரயில் பாதை திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினார் பின்னர்
மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *