நாகப்பட்டினம்,ஜூலை.23-
நாகை மாவட்டம் திருமருகலில் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. திருமருகல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தை நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் 2026 மே மாதத்தில் ஓய்வு பெற்ற 18 ஆசிரியர்களுக்கு சிறப்பு சேம நலநிதி தொகைக்கான ஆணை, ஈட்டிய விடுப்பு தொகைக்கான ஆணைகள் வழங்கினார்.

வட்டார கல்வி அலுவலர் சிவகுமார் ஜூன் மாதத்தில் பார்வையிட்ட பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட அலுவலர் ஞானசேகரன், ஆய்வாளர் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை வட்டார கல்வி அலுவலர் சிவகுமார் ஏற்பாடு செய்திருந்தார். ஓய்வு பெற்ற அனைவருக்கும் இரண்டு மாத காலத்தில் அனைத்து ஓய்வூதிய பலன்களையும் முழுமையாக பெற்று தந்தமைக்காக வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் அனைத்து ஆசிரியர்களால் பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *