மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி முன்னிட்டு பால்குட திருவிழா விமர்சியாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு காலை சூரக்காடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையோடு ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தது.

பின்னர் ஸ்ரீ மகா திரிசூலம் வாராஹி அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், பூக்கள், பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சாய் கிரண்சுவாமி மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *