நாகப்பட்டினம்,ஜூலை.21-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 19 ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்தம், 20 ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இது இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாழ்மங்கலம் கிராம வாசிகள் செய்திருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வருகின்ற ஜூலை 27-ம் தேதி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *