மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள விஎன்கே மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணியான வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு (சுய கணக்கெடுப்பு) பணிகள் குறித்து கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்திரவின்படி நகராட்சி ஆணையாளர் திருமதி
இரா. அமுதா அவர்கள் தலைமையில், கல்லூரி முதல்வர் திருமதி. ரேவதி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவி செல்வி. இர்ஃபானா பாத்திமா அவர்கள் அனைவரையும் வரவேற்றார் .

இப்பயிற்சி மூலம் அவர்கள் தங்களது குடும்பம் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நகராட்சி மேலாளர் திருமதி பொன்மணி , மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சியாளர் திரு சுரேஷ், நகராட்சி பணியாளர் திரு தமிழரசன், தொழில்நுட்ப பணியாளர் திரு முஜிபுர் ரகுமான் ஆகியோர் 33 கேள்விகள் குறித்து விளக்கம் தந்து இப்பணி குறித்து பயிற்சி அளித்தனர்.

விரிவுரையாளர்கள் மற்றும் மாணவியர்கள் ஆர்வமுடன் பயிற்சியில் கலந்து கொண்டனர் செல்வி .காவ்யா வர்ஷினி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *