உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை அமைச்சர் நடவடிக்கை

வடலூர் அருகே உள்ள மருவாய்,அய்யனார் கோவிலில் உள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக உணவு வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் பி.வெங்கடரமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்பொழுது தினசரி எவ்வளவு நெல்கள் கொள்முதல் செய்யப்படுகிறது நெல்லின் தரம் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது நெல்லின் உடைய தரத்தை சரியாக பராமரிக்கப்படுகிறதா கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக எனவும் ஆய்வு செய்த அமைச்சர் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்ய மூட்டைக்கு கையூட்டாக பணம் வசூலிக்கப்படுகிறதா என விசாரித்த அப்பொழுது அதிகாரிகள் ஏதும் வசூலிக்கப்படவில்லை என கூறினார்கள்

இதனைத் தொடர்ந்து அமைச்சர் நெல் கொள்முதல் செய்த விவசாயிகளின் பட்டியலில் இருந்த ஒரு செல் போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது, மருவாய்
விவசாயி அஷ்வின் என்பவர் மூட்டை ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 50 வசூலிக்கப்படுகிறது

என்று விவசாயி அமைச்சரிடம் கூறினார் . இதனைத் தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையத்தில்பொறுப்பு அலுவலர் பட்டியல்எழுத்தர் வேல்முருகன் மற்றும் தொடர்புடைய தற்காலிக ஊழியரை பணி நீக்கம் செய்யவும், இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட பதிவேடுகளை ஆய்வு செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்,

தொடர்ந்து விவசாயிகளிடம் பேசிய அவர் கருத்து கேட்டார் அப்போது விவசாயிகள் உர விலைகள் உயர்ந்து வரும் நிலையில் நெல் விலையைகூடுதலாக்கி தரவேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தனர் அதற்கான ஏற்பாடுகளை செய்வோம்,விவசாயிகள் தரமான ஈரப்பதம் இல்லாத நல்ல நெல்களை வழங்குங்கள், பழுப்பு இல்லாத
தரமான அரிசிகளை மக்களுக்கு வழங்க முடியும் எனக்கூறினார்.

தொடர்ந்து எடையாளர்கள் மூட்டைக்கு பத்து ரூபாய் தான் மூட்டை எடை வைத்து தைத்து அடுக்க கூலி குறைவாக உள்ளது கூலியை கூடுதலாக வழங்க வேண்டும் என அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர் விரைவில் உங்கள் குறைவு குறைகள் பரிசீலிக்கப்படும் ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சிபி செந்தில்குமார் ஆதித்யா மாவட்டவருவாய் ஆய்வாளர் சுந்தர்ராஜன் குறிஞ்சிப்பாடி தாசில்தார் சுமித்ராமற்றும் தொடர்புடைய அதிகாரிகள் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *