நாகப்பட்டினம்,ஜூலை.18-
நாகை மாவட்ட கலெக்டர் பிரவின்குமார் அறிவுறுத்தலின் பேரில் திருமருகல் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பஸ் நிலையங்களிலும் குப்பைகளை அகற்றிட வேண்டும்,தேவையற்ற எழுத்துக்களை அகற்றிட வேண்டும்,தேவையற்ற நோட்டீஸ், பேனர் நீக்க வேண்டும், அமரும் இடங்களில் பழுது ஏற்பட்டு இருப்பின் அதனை பழுது நீக்கம் செய்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் திருமருகல் பஸ் நிலையத்தில் தூய்மை பணியாளர்கள் மூலம் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஹரிகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்வாணன், ஊராட்சி செயலர் நடராஜன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *