நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமருகல் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் திருமருகல் ஒன்றியத்துக்கு உட்பட்ட 1-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 150 மாணவ மாணவியர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈத் ஜும்மை ரஹிமா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன், வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். முன்னதாக பள்ளி ஓவிய ஆசிரியர் குமரவேல் வரவேற்றார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் விஜயலெட்சுமி நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *