திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியில் 33 வது ஆண்டு முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை வரவேற்றார். பொறியாளர் கவிஞர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.


சிறப்பு அழைப்பாளராக, எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான ராசி. அழகப்பன் பங்கேற்று ஊக்கவுரை வழங்கினார். மேலும் வாழ்கையின் திறவுகோல் தான் இந்த கல்லூரி படிப்பு, படிப்பு தான் படிக்கற்களாக உங்களை உயர்த்தும் என்று வலியுறுத்தினார். முன்னதாக, ராசி அழகப்பன் எழுதிய ‘சொல்லேர் உழவு’ நூல் வெளியீட்டு விழா’ நடைபெற்றது.மேலும் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குநர்கள் டிகேஜி ஆனந்த், டிடிகே ராதா, சங்கர், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், புலவர் மா.மங்கையர்க்கரசி உள்ளிட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதியில் கல்லூரி நிர்வாக அலுவலர் மு.செல்வம் நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *