செய்தி: தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன், ஆணையர் பிரியங்கா மற்றும் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு, மேயர் ஜெகன் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளுடன் அமர்ந்து அவர்கள் செல்லும் இடங்கள், பேருந்து வசதிகள் மற்றும் நிலையத்தில் உள்ள குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், ஆவின் பாலகத்தில் பயணிகளுக்கு டீ வாங்கிக் கொடுத்து அவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடிய அவர், டீக்கான முழு தொகையையும் தனது சொந்த செலவில் செலுத்தினார். மேயர் நேரடியாக அமர்ந்து நலம் விசாரித்து கருத்துக்களைக் கேட்டது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக ஒரு முதியவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் வைதேகி, சுகாதார அலுவலர் ராஜசேகர், திமுக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *