தருமபுரி,

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் முப்பெரும் விழா தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் மு.ரா. அரவிந்தன் அவர்களின் ஒப்புதலுடன், தருமபுரி மாவட்ட துணைத் தலைவர் வி.கே. ஆதிமூலம் மற்றும் மாவட்டச் செயலாளர் பி. பிரபு ஆகியோர் தலைமையேற்றனர். மாவட்டப் பொருளாளர் பி. அருண், மாவட்ட ஆலோசகர் ஆர். ஆறுமுகம், மாவட்ட அமைப்பாளர் வி. மணி ஆகியோர் முன்னிலையில் அறக்கட்டளையின் அலுவலகம் திறப்பு, பெயர்ப் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.பி. நந்தகுமார், மாநில துணைத் தலைவர் ஆர். செல்வகுமார், மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜி. தனேஷ்குமார், மாநிலப் பொருளாளர் எம். சரத்பாபு, மாநில செயற்குழு உறுப்பினர் ஜே. பிரபு, கடலூர் மாவட்டத் தலைவர் வீரமணி, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ஏழுமலை, வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் புகழேந்தி உள்ளிட்ட மாநில, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *