தென்காசி ஜூலை – 13

தென்காசி மாவட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட சி என் ஜி எரிபொருள் உபயோகப்படுத்தும் பயணிகள் ஆட்டோக்கள் செயல்பட்டு வருகின்றனர் இவற்றிற்கு CNG எரிபொருள் நிரப்புவதற்கு தென்காசி மாவட்டத்திலேயே ஒரு பல்க் மட்டும் செயல்பட்டு வருகிறது

இதனால் ஆட்டோக்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் மிகுந்த தட்டுப்பாடு நிலவுவதாகவும் தனியார் வாகனங்களில் எரிபொருள் நிரப்புவதற்கு அதிகப்படியான தொகையை கொடுத்து நிரப்புவதால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக இதனை கருத்தில் கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் எரிபொருளை நிரப்புவதற்கு வரைமுறைப்படுத்த வேண்டும் என்று சி என் ஜி ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர் இந்நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் கனி கோபால் அப்துல் வா வா நகரம் அப்துல் காதர் உட்பட ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *