கரூரில் தோழர் களம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சிறப்பு சட்டம் இயற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், ஆணவப் படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடவும், தனிச்சட்டத்தை உடனடியாக கொண்டு வரவும் தமிழக அரசை வலியுறுத்தினர்.
மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும், தொழில் தொடங்க வங்கிக் கடனில் முன்னுரிமை அளிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் தோழர் களம் மற்றும் திராவிட இயக்க தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.
