கோவையை சேர்ந்த தொழில் அதிபரும் அரசியல் பிரமுகருமான விஷ்ணு பிரபு பப்புவா நியூ கினியா நாட்டின் இந்திய வர்த்தக ஆணையராக செயல்பட்டு வருகிறார்..

இந்நிலையில் இவர்,மேலும், இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்..

டெல்லியில் நடைபெற்ற சிறப்பு விழாவில், சி.எம். விஷ்ணு பிரபு இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் (India ASEAN Trade Council) வர்த்தகத் தூதராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனம் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், தொழில் முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வணிகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் துறைகளில் விஷ்ணு பிரபுவின் அனுபவம் பாராட்டப்பட்டதுடன், அவரது நியமனம் இந்தியா-ஆசியான் நாடுகளுக்கிடையிலான புதிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

புதிதாக -ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக சி.எம். விஷ்ணு பிரபுவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *