கல்பாக்கம்


செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாள்தோறும் மாணவர்கள் வியாபாரிகள் உட்பட பொதுமக்கள் வெளியூருக்கு ஆயிரக்கானோர் சென்னை புதுச்சேரி உட்பட பல்வேறு இடங்களுக்கு பேருந்தில் சென்று வருகின்றனர் தவிர வெளியூர்களில் இருந்து கூவத்தூர் பகுதியில் உள்ள வங்கி அஞ்சலகம் பள்ளிக்கூடங்களுக்கு பணியாளர்கள் வந்து செல்கின்றனர்

இந்த நிலையில் பேருந்து நிறுத்தத்தில் பொதுக் கழிவறை இல்லாததால் வயதானவர்கள் பெண்கள் உட்பட பொதுமக்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர் இதையறிந்த கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.பி. சகாதேவன் பேருந்து நிறுத்தம் அருகிலேயே கழிவறை கட்டடம் அமைக்க முடிவு செய்தார்

இதைத் தொடர்ந்து ரூ 5 இலட்சத்து 25 ஆயிரம் செலவில் ஆண் பெண்களுக்கான சமூக சுகாதார கழிவறைக் கட்டடம் பராமரிப்பு பணியாளர்களுடன் அமைக்கப்பட்டது – கடந்த 29 ஆம் தேதி அன்று இந்த கழிவறைக் கட்டடம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கே பி சகாதேவன் திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சிப் பணியாளர்கள் உட்பட பொது மக்கள் கலந்து கொண்டனர் கழிவறை வசதியை நீண்ட காலமாக எதிர்ப்பார்த்திருந்த பொது மக்கள் மற்றும் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *