நாகப்பட்டினம்,ஜூன்.1-
நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் படி கடந்த மாதம் 30 ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் திருவிழா தொடங்கியது.

விழாவில் நேற்று முன்தினம் மதியம் கஞ்சிவர்த்தலும், இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 8 -ம் தேதி மாலை காவடி எடுத்தலும், தீமிதி திருவிழாவும், இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிராம தலைவர் குமரகுருபரன், செயலாளர் மரவாடி சேகர் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *