சமூகநலத்துறை வழியாக குழந்தைகள், மாணவிகள் மற்றும் மகளிர் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய மகத்தான சாதனைகள் அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தூத்துக்குடி மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சமூக நலத்துறை வழியாக மகளிர், குழந்தைகள், மாணவிகள் மற்றும் திருநங்கைகள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.
கல்வி வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் “புதுமைப் பெண்” உயர்கல்வி உறுதித் திட்டம் 2022– 2023 முதல் தொடங்கி இதுவரை கலை, அறிவியல், பொறியியல், தொழிற்பயிற்சி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி கற்கும் 5,29,728 மாணவிகள் மாதம் ரூ.1,000 வீதம் பெறுகின்றனர். அதேபோல், “தமிழ்ப்புதல்வன்” திட்டம் 2024– 2025 கல்வியாண்டில் தொடங்கி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6–12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதுவரை 3,92,449 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
