கடலூர், மாவட்டம் வடலூர் பிரைடு லயன்ஸ் கிளப் சார்பாக தூய்மை பணியாளர்கள் நலத்திட்ட உதவி மற்றும் முதல் வட்டார கலந்தாய்வுக்கூட்டம் இனிதே நடைபெற்றது கூட்டத்திற்கு வட்டாரத்தலைவர் ஜெயராஜ் ஜான்சன் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் பி. தமிழரசன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஆளுநர்கள் தணிகாசலம், சுரேஷ் நீலகண்டன், விஜயலட்சுமி சிவக்குமார், சிவக்குமார், ராமவாசுதேவன், ராஜபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தூய்மைபணியாளர்கள் 25 நபர்களுக்கு அரிசி,சேலை காய்கறிகள் அனைத்தும் வழங்கப்பட்டன. சங்க நிர்வாகிகள் ஜோதி,கார்த்திக், கலைமணி, பிரேம்ஆனந்த், அஜித்,அபிலேஷ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முடிவில் பெஸ்ட் சிவா நன்றி உரை கூறினார்.
