திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நகர்புற குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு எருமைகளால் பொது மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர் காலை மாலை எந்த நேரமும் நகர் பகுதிகளில் காட்டெருமைகள் உலா வருவது வழக்கமாகியுள்ளது

கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் கணவருடன் வந்த கர்ப்பிணி பெண் தாக்க பட்டது குறிப்பிடத்தக்கது பல முறை வனத்துறையிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பொது மக்கள் குற்றச்சாட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு வனவிலங்குகள் நகர் பகுதிக்குள் வராமல் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வன அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.