காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் மாமல்லன் மருத்துவமனையில் அதிநவீன இருதய ஆஞ்சியோ சிகிச்சை மையத்தை எஸ்பி கே.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் மாமல்லன் மருத்துவமனையில் அதிநவீன இருதய ஆஞ்சியோ சிகிச்சை மையம் திறப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஞா.மருண்ராஜ் தலைமை வகித்தார்.இயக்குநர்கள் ஜெ.தியானேஷ்வரன்,மரியா ஆண்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் பார்த்தசாரதி வரவேற்று பேசினார்.

காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் அதி நவீன ஆஞ்சியோ சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.இருதய அறுவைச் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் சுரேஷ் மற்றும் சுரேந்தர் ஆகியோர் இருதயத்தில் ஏற்படும் ரத்தக்குழாய் அடைப்புகளை நவீனகருவி மூலம் எப்படி நீக்குகிறோம் என மாதிரி செயல்முறை விளக்கம் அளித்தனர்.
காஞ்சிபுரத்தில் முதல் முறையாக இருதயத்தில் உள்ள ரத்தக்குழாய் அடைப்புகளை சரி செய்யும் அதிநவீன ஆஞ்சியோ சிகிச்சைக் கருவி மாமல்லன் மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இருதய நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக சென்னைக்கு செல்லாமல் காஞ்சிபுரத்திலேயே உடனடியாக சிகிச்சை செய்து கொள்ளும் வசதி காஞ்சிபுரம் மக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது என மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஞா.அருண்ராஜ் பேசினார்.

கண் மருத்துவர் ஆர்.அனுஷா நன்றி கூறினார்.நிகழ்வில் மகப்பேறு மருத்துவர் ஜோஷ்வா உட்பட மருத்துவர்கள்,மருத்துவமனை பணியாளர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.