உணவு தானிய சரக்கு ஏற்றுவதில் தெற்கு ரயில்வேயின் புதிய சாதனையாக, அக்டோபர் 2025 ல் 85 ரேக்குகள் ஏற்றப் பட்டுள்ளன. வரை அக்டோபர் 2025 மாதத்திற்கான உணவு தானிய ஏற்றுதலில் தெற்கு ரயில்வே குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்துள்ளது. அக்டோபர் 17 முதல் 25 வரை, தெற்கு ரயில்வே மொத்தம் 85 ரேக்குகளை ஏற்றியுள்ளது. இது முந்தைய ஆண்டுகளின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது கணிசமான அதிகரிப்பைக் காட்டுகிறது.
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் கோரிக்கைகளுக்கு இணங்க, தெற்கு ரயில்வே தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங் களுக்கு நேரடி கொள்முதல் மையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் போக்குவரத்திற்காக ரேக்குகளை வழங்கியுள்ளது. தஞ்சை, நாகப்பட்டினம், நீடாமங்கலம், கும்பகோணம், சீர்காழி, மயிலாடுதுறை, பேரளம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பட்டுக்கோட்டை, விருதாச்சலம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள குட் ஷெட்களில் ரேக் சப்ளை செய்யப் பட்டுள்ளது. ஏற்றப்பட்ட இந்த ரேக்குகள் தேவைக் கேற்ப தமிழகத்தின் அனைத்து பகுதி களுக்கும் உடனடி யாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. (கூடல்நகர், மதுரை), ராஜபாளையம், அருப்புக்கோட்டை, செட்டிநாடு, புதுக்கோட்டை, மீளவிட்டான், நாகர்கோவில், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், கொருக்குப்பேட்டை (சென்னை) மற்றும் காட்பாடி ஆகியவை முக்கிய இடங்களாகும். டெல்டா பகுதியில் மகத்தான குறுவை மகசூல் கிடைத்துள்ள நிலையில், இந்த சாதனை மிகவும் பாராட்டுக்குரியது என்பது குறிப்பிடத் தக்கது.
அக்டோபர் 25 ம் தேதியின் முதல் இரண்டு வாரங்களில் (1 முதல் 17 வரை), ரயில்வே 85 ரயில்களை (2.3 லட்சம் டன்) ஏற்றி இயக்கியுள்ளது, இது கடந்த ஆண்டின் செயல் திறனை விட நான்கு மடங்கு அதிகம் (2024 ல் 21 ரயில்கள்) இதே காலகட்டத்தில், 2023 ல் 16 ரயில்களிலும் 2022 ல் 77 ரயில்களிலும் ஏற்றப்பட்டன.
ரயில் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் போக்குவரத்தில் ஏற்பட்ட குறிப்பிடத் தக்க வளர்ச்சி, தெற்கு ரயில்வே விதிவிலக்கான சேவையை வழங்கவும் தமிழ்நாட்டின் உணவு தானிய போக்குவரத்து தேவைகளை ஆதரிக்கவும் உறுதிபூண்டுள்ளது.
