புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட காக்காயந்தோப்பு, பவானி நகர், சுப்புலட்சுமி நகர், சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்படாமல் கழிவுநீர் உள்ளதால் சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது, 2008–ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்ட சுனாமி குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படாதது, அரியாங்குப்பம் மேற்கு பகுதியில் உள்ள சொர்ணா நகர், செளபாக்கியா கார்டன் பகுதிகளில் சாலை அமைக்க பூமி பூஜை போட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் சாலை வசதி ஏற்படுத்தாமல் இருப்பது, வீராம்பட்டினம் சந்திப்பில் இருந்து சின்ன வீராம்பட்டினம் செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போட வேண்டிய பக்கவாய்க்கால் முழுமை பெறாமல் இருப்பது உள்ளிட்ட பணிகளை செய்து கொடுக்காமல், அலட்சிய போக்குடன் செயல்படும் புதுச்சேரி அரசை கண்டித்தும், மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற போதிய நடவடிக்கை எடுக்காமலும், பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள் மற்றும் சாலையில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை கட்டுப்பாடுத்த தவறிய கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்தும் அரியாங்குப்பம் தொகுதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடந்தது.
அரியாங்குப்பம் பிரம்மன் சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் சீத்தாராமன் முன்னிலை வகித்தார்.
இதில், திமுக மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அரியாங்குப்பம் தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்துத்தராத புதுச்சேரி அரசையும், கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தையும் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வேலன், கோபாலகிருஷ்ணன், சுற்றுச்சூழல் அணித் தலைவர் பன்னீர்செல்வம், மீனவர் அணித் தலைவர் ரமேஷ், மாநில பிரதிநிதி தினகரராசு, இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் கலிவரதன், ஜபருல்லா, சிறுபான்மை அணி லியாகத்அலி, தகவல் தொழில்நுட்ப அணி பாலபாரதி, தொகுதி நிர்வாகிகள் பெருமாள், ஜீவானந்தம், ராஜேந்திரன், இளைஞர் அணி ரமணா, மணிபாரதி, லோகநாதன், ராஜேந்திரன், அஜிபாஷா, மாணவர் அணி வினோத், ரமேஷ், சேட்டு மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.
